தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூரில் பிடிபட்ட ‘முள்’ எலி - வனப்பகுதியில் விடுவிப்பு

விருதுநகர்: சாத்தூா் அருகே உள்ள தமிழ்நாடு உணவகம் அருகே பிடிபட்ட அரியவகை முள் எலி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Thorn rat
Thorn rat

By

Published : Feb 18, 2020, 8:46 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் அருகே நேற்று அழிந்துவரும் இனமான அரிய வகை முள் எலி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனைக் கண்ட உணவக நிர்வாகி அந்த முள் எலியைப் பிடித்து பத்திரப்படுத்தினர்.

சாத்தூரில் பிடிபட்ட முள்எலி

பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், சுமார் 500 கிராம் எடை கொண்ட முள் எலியை பெற்றுக்கொண்டனர். அதனை ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

இதையும் படிங்க: குட்டிகளுடன் கம்பீரமாக நடந்து வந்த புலி - கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details