தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 23, 2021, 5:41 PM IST

ETV Bharat / state

சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு செல்ல மாவட்ட ஆவர் திரு கண்ணன் தடை விதித்து உத்தரவு அளிக்கப்பட்டுள்ளார்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை - ஆட்சித்தலைவர் திரு கண்ணன் உத்தரவு
சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை - ஆட்சித்தலைவர் திரு கண்ணன் உத்தரவு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக, இந்த மாதத்திற்கான பிரதோஷம் 24 ஆம் தேதியும், 26 ஆம் தேதி பௌர்ணமி வரவிருப்பதால் 24 ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பக்தர்கள் சமூக இடைவெளியுடன் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேற்று (ஏப்ரல் 23) இரவு ஒரு உத்தரவு பிறப்பித்தார். கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால், கோயிலுக்கு வர கூடிய பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் ஏற்கனவே மலையேற வழங்கப்பட்ட அனுமதி மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, நாளை யாரும் சதுரகிரி அடிவாரமான தாணிப்பாறை பகுதிக்கு வரவேண்டாம்.

மேலும், தாணிப்பாறை பகுதிக்கு செல்லும் வழியில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் அறிவிப்புகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும்’’ என்று உத்தரவளித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள்க'- ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details