தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு மாநகராட்சி அபராதம்!

வேலூரில் கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கு மாநகராட்சி அபராதம் விதித்தது.

விதிமுறைகளை மீறிய கடைக்களுகு மாநகராட்சி அபராதம்
விதிமுறைகளை மீறிய கடைக்களுகு மாநகராட்சி அபராதம்

By

Published : Apr 27, 2021, 10:23 PM IST

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும், தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்தவும், கண்ணாடி டம்ளர்களில் தேநீர் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலூரிலுள்ள உணவகங்களில் நேற்று(ஏப்.26) முதல் பார்சல் உணவு மட்டுமே வழங்கி வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி சுகாதார நல அலுவலர் சித்திரசேனா, இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் இன்று (ஏப்.27) காலை வேலூர் பழைய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் கண்ணாடி டம்ளரில் வாடிக்கையாளர்களுக்குத் தேநீர் கொடுத்த ஆவின் பாலக விற்பனையாளரைக் கண்டித்த சுகாதாரத்துறை அலுவலர்கள், ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதித்தனர்.

இதேபோன்று தடையை மீறிய சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல தேநீர் கடையில் கண்ணாடி டம்ளரில் தேநீர் கொடுத்ததாக, அந்த கடைக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்றும், மீறினால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, சுகாதாரத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையுன் படிங்க:வாஜ்பாயின் உறவினர் கரோனாவால் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details