தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நீட் தேர்வால் மாணவர்கள் இறக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எதிக்ர்கட்சிகள் உருவாகிறார்கள்" - நயினார் நாகேந்திரன்

நீட் தேர்வால் தான் தமிழ்நாட்டில் மாணவர்கள் இறக்கிறார்கள் என்ற ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் உருவாக்குகிறார்கள் என பாஜகவின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

By

Published : Sep 14, 2020, 12:06 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாஜகவின் செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில், பாஜகவின் மாநில துணைத்தலைவரும் தென் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ”தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு தற்போது பேசுவதற்கு வேற சப்ஜெட் இல்லாத காரணத்தால்தான் நீட் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளனர். தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வால்தான் இறக்கிறார்கள் என்ற ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கூறி வருகிறார்கள். அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

நீட் தேர்வு என்பது பல்வேறு மாநிலங்களில் நடைபெறக்கூடியது. ஆனால் எட்டு மாதம் கழித்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறிவருவதை அவர் விளக்க வேண்டும். அந்தந்த காலத்தில் ஏற்படும் சூழ்நிலையை வைத்து மக்கள் ஓட்டு போடுவது இல்லை. நீட் தேர்வு விவகாரத்தால் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது” என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details