விருதுநகர்: கடந்த மாதம் விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு அதிமுகவினர் சட்டபேரவையில் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை மத்திய சிறை:அதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்ற உத்தரவின்படி, 7 நாட்கள் விசாரணை செய்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களுக்கு அடுத்த மாதம் மே 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில் மீண்டும் மதுரை மத்திய சிறையில் நால்வரையும் அடைத்தனர்.