மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது நத்தம்பட்டி பகுதி. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இன்று (மார்ச் 2) ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வினோத் அமல்ராஜ் என்பவர் சாலையின் ஓரம் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டபடியே வாகனத்தை திருப்பியபோது அதே பகுதியில் தென்காசியில் இருந்து வந்த கார் அவர் மீது பலமாக மோதியதில் அவரது வலது கால் துண்டானது.