தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திறந்துகிடந்த 27 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்!

விருதுநகர்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் உயிரிழந்தை அடுத்து, விருதுநகரில் பல்வேறு இடங்களில் திறந்துகிடந்த 27 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளன.

27-borewells-were-closed-at-virudhunagar

By

Published : Oct 30, 2019, 10:16 AM IST

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் உயிரிழந்தை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், விஸ்வநத்தம், சாமிநத்தம், வடபட்டி, வேண்டுராயபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சில மாதங்களுக்கு முன்பு குடிநீருக்காக ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டன. போதிய நீர் கிடைக்காததால் அவற்றில் பல கிணறுகள் மூடப்படாமல் இருந்தன.

இதனிடையே, பல்வேறு இடங்களில் திறந்த நிலையிலிருந்த 27 ஆழ்துளைக் கிணறுகளை பொதுமக்கள் முன்னிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் மூடினர். விருதுநகரில் மேலும் பல கிராமங்களில் மூடப்படாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து உடனடியாக மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...

பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட புதுக்கோட்டை - நாகை ஆட்சியர்கள் நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details