விழுப்புரம்:பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்த வழக்கில், வரும் நவம்பர் 23ஆம் தேதி அன்று அரசு தரப்பு சாட்சியான டிஐஜி ஆனி விஜயா நேரில் ஆஜராக வேண்டும் என விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சம்மன் வழங்கியுள்ளது.
எதிர் தரப்பு குறுக்கு விசாரணை நடைபெறாவிட்டாலும் அரசு தரப்பு சாட்சி விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும் என நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சிபிசிஐடிக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி
மேலும், நேரில் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் டிஜிபி தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி கோபிநாதன் நிராகரித்துள்ளார்.
சாட்சிகளை ஆஜர்படுத்துவதில் ஏன் தாமதம் என சிபிசிஐடிக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கு விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபியும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Pocso act: திண்டுக்கல் தனியார் கல்லூரிக்கு சீல் வைப்பு