விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவை மேலும் மக்களிடையே பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை கூறியதாவது; "விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 18 பேர் விழுப்புரம் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவை மேலும் மக்களிடையே பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன், ஒருபகுதியாக விழுப்புரம் நகரில் உள்ள 42 வார்டு பகுதிகளிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வாரம் ஒருமுறை மட்டுமே வெளியே வந்து பொருட்களை வாங்கக் கூடிய வகையில் நீலம், ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட ஆறு வகையான வண்ண அட்டைகள் அந்தந்த பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது.