தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்விக்கும் ஜிஎஸ்டியா? - விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கண்டனம்!

மத்திய அரசு மாணவர்கள் பயன்படுத்தும் பேனா, பென்சில் உள்ளிட்டப் பல்வேறு கல்வி உபகரணங்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பை ஏன் குறைக்கக்கூடாது என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கல்விக்கும் ஜிஎஸ்டியா? - விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கண்டனம்
கல்விக்கும் ஜிஎஸ்டியா? - விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கண்டனம்

By

Published : Jul 22, 2022, 9:39 AM IST

விழுப்புரம்:விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேனா, பென்சில், ரப்பர், நோட்டுப் புத்தகங்கள் முதலான கல்வி படிப்பு சார்ந்த உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைப்பதற்கான வழிவகை இல்லையா எனவும், மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதற்கு வழிவகை ஏதும் அரசிடம் இல்லையா? இதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன?’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், ' பெட்ரோல், டீசல் மீதான செஸ்சார்ஜ் போன்ற கூடுதல் வரிகளை உயர்த்தும் திட்டம் ஏதேனும் நடுவண் அரசிடம் இருக்கிறதா என்று மக்களவையில் தான் கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்குப்பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அது திருப்திகரமாக இல்லை. அவர் அளித்துள்ள பதிலில் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே ஜிஎஸ்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறையில் பேனா, பென்சில், ரப்பர் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் பரிந்துரைக்கப்பட்ட தகவல் எதுவும் தற்போது வரை இல்லை. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல் அறுவை சிகிச்சை பெல்ட்டுகள் முதலான சாதனங்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தும் திட்டம் தற்போது நடுவண் அரசுக்கு இல்லை என்று பதில் அளித்துள்ளார். வருங்கால சமுதாயம் வருங்கால இந்தியா எனக்கூறும் மாணவர்கள் உபயோகப்படுத்தும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்காமல் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது’ என தனது அறிக்கையில் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தொடர்ந்து 62ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

ABOUT THE AUTHOR

...view details