விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவர் 2012ஆம் ஆண்டு சென்னை சாலையில் அரசுப் பேருந்து மோதி விபத்தில் இறந்துவிட்டார்.
விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி!
விழுப்புரம்: விபத்தை ஏற்படுத்தியதற்கான நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப் பேருந்தை நீதிமன்றம் ஜப்தி செய்தது.
இதுகுறித்து அவரது மனைவி சாரதா நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். வழக்கின் முடிவில் இறந்தவர் மனைவிக்கு, போக்குவரத்துத்துறை 10 லட்சத்து 33 ஆயிரத்து 646 ரூபாய் வட்டியுடன் கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போக்குவரத்து துறை இறந்தவர் மனைவிக்கு 9 லட்சம் மட்டுமே திருப்பித் தந்தது.
மீதி ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாயைக் கொடுக்காததால் விழுப்புரம் சிறப்பு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் (பொறுப்பு) உத்தரவின்படி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்தினை நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் ஜப்தி செய்து நீதிமன்றம் எடுத்து சென்றனர்.