தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 21, 2020, 1:37 AM IST

ETV Bharat / state

கரோனா நடவடிக்கை: செஞ்சியில் விழுப்புரம் ஆட்சியர் அதிரடி ஆய்வு

விழுப்புரம்: செஞ்சி அருகே கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியினை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரோனா! விழுப்புரம் ஆட்சியர் அதிரடி ஆய்வு
கரோனா! விழுப்புரம் ஆட்சியர் அதிரடி ஆய்வு

இந்த ஆய்வின்போது நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தடுப்புக் கட்டைகள் ஏற்படுத்தி ஊர்ப் பொதுமக்கள் வெளியே செல்லாதவாறும், வெளியூரைச் சேர்ந்தவர்கள் உள்ளே செல்லாதவாறும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், உடல்நிலை சரியில்லாதவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீர் ஆகியவற்றைத் தினந்தோறும் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செஞ்சி கடைவீதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொருள்கள்ள் வாங்கவரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கடையின் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும், வெப்பமானி மூலம் உடல்வெப்ப நிலையைக் கண்டறிய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details