விழுப்புரம் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியாற்றி வந்தவர், ஏழுமலை (25). இவர் காக்குப்பம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் நேற்று (ஆக.16) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து விழுப்புரம் சரக காவல் துறை துணைத்தலைவர் எழிலரசன் தற்கொலை செய்து கொண்ட ஏழுமலையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
விசாரணையில், "ஏழுமலையின் தற்கொலைக்கு கூடுதல் பணிச்சுமையே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. முதல் நாள் இரவு பணி செய்த காவலரை மறுநாள் காலை மீண்டும் பணிக்கு போக சொன்னதால் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும், ஏழுமலைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.