சேலம்: சேலம் மாவட்டம்ஆத்தூரைச் சேர்ந்தவர் வெள்ளரிக்காய் வியாபாரி ராஜா. இவர், கடந்த 15ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியிலுள்ள விவசாயிகளிடம் வெள்ளரிக்காய் பயிரிடப் பணம் பட்டுவாடா செய்யதுவிட்டு தனது காரில் 30 லட்சம் ரூபாயுடன் திரும்பிச் சென்றார்.
அப்போது, காரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே, காரை வழிமறித்து 30 லட்சம் ரூபாயைக் கத்திமுனையில் கொள்ளையடித்துச் சென்றனர்.
பிறகு இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கடந்த 18 ஆம் தேதி பன்னீர் செல்வம், மணிமாறன், மனோஜ் குமார், செல்வகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.