தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 60 இடங்களில் வெற்றி பெறும்' - எல்.முருகன்

விழுப்புரம்: அதிமுகவில் எந்த விரிசலும் இருப்பது போல் எங்களுக்கு தெரியவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

பாஜக தலைவர் எல்.முருகன்
பாஜக தலைவர் எல்.முருகன்

By

Published : Sep 21, 2020, 4:05 AM IST

தமிழ்நாடு பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று (செப்.20) நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், " திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் திட்டங்களை குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவர் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார். விவசாயம் குறித்து எதுவும் தெரியாத ஸ்டாலின் அதுகுறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்.

தமிழ்நாடு பாஜக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. தற்போது பாஜகவில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து வருகிறார்கள். எனவே, தற்போதுள்ள சூழலில் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட்டாலும் பாஜக 60 தொகுதிகளில் வெற்றிபெறும்.

அதிமுகவில் எந்த விரிசலும் இருப்பது போல் எங்களுக்குத் தெரியவில்லை. சசிகலாவின் வருகை தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து எதுவும் கூற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details