தமிழ்நாடு

tamil nadu

ஒரேநாளில் 22 இடங்களில் ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம்: மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 22 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

By

Published : Sep 28, 2020, 11:24 AM IST

Published : Sep 28, 2020, 11:24 AM IST

பொன்முடி
பொன்முடி

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் வேளாண் துறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளன.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், மணலூர்பேட்டை, திருவெண்ணைநல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி, கோலியனூர், கோட்டகுப்பம் உள்ளிட்ட 22 ஒன்றியங்களில் இன்று ஒரேநாளில் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து திமுக, அதன் தோழமை கட்சிகள் சார்பில் தகுந்த இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைகிறது.

விழுப்புரத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, கூட்டணி கட்சியின் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கிடையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்து கலந்துகொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details