விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (26). இவர் செஞ்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்தார்.
சரவணன் நேற்றிரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதாகக் காவல் நிலையத்தில் உள்ள சக காவலர்களிடம் கூறிவிட்டுக் கிளம்பியுள்ளார்.
ஆனால் வீட்டிற்குச் செல்லாமல், இவர் தனது விவசாய நிலத்தில் இருந்த மரத்தில் திடீரென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதைக்கண்டு அதிர்சியடைந்த பொதுமக்கள், அருகிலிருந்த அனந்தபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.