விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பெரியார் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை என அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டினர். குடிநீர் வழங்கக்கோரி பலமுறை நகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்தரிமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்; போக்குவரத்து பாதிப்பு!
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பகுதியில் நிலவிவரும் குடிநீர் பிரச்னைக்கு நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்; போக்குவரத்து பாதிப்பு!
இதனால், மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினருடன் போராட்டக்கார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகரட்சி அலுவலர்கள் வந்து போரட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.