விழுப்புரம் அருகேயுள்ள தெளிமேடு பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை அமைத்துக் கொடுக்க வலியுறுத்திதெளிமேடு, லட்சுமிபுரம், கப்பூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்றுவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையை சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் மணல் அள்ளப்பட்ட காரணத்தினால் சுமார் 20 அடிக்கும் மேல் ஆற்றில் பள்ளம் ஏற்பட்டுவிட்டது. இதனால் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் வரும்போது அருகில் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் வருவது கிடையாது.
பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினால் எங்கள் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் போதுமான நீரின்றி தவித்துவருகிறோம்.
தடுப்பணை அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் முறையிட்ட பொதுமக்கள் ஆகவே மாவட்ட ஆட்சியர் இதனைக் கருத்தில்கொண்டு தெளிமேடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை அமைத்தும், வாய்க்கால்களைச் சீரமைத்தும், எங்கள் கிராம பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் தண்ணீர் பிரச்சனையை முதலமைச்சரிடம் கூறுவேன் - ஆட்சியர் உறுதி..!