விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகக் கரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதனால் அத்தியாவசியப் பொருள்களுக்காக வெளியில் வரும் பொதுமக்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
கரோனா இல்லாத நாள் விழுப்புரம் பொதுமக்கள் நிம்மதி
விழுப்புரம் : மாவட்டத்தில் இன்று புதிதாக யாருக்கும் கரோனா தொற்று இல்லாததால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி (மே 10) விழுப்புரத்தில் 298 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 471 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.11) புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க :ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழுக்களின் பணிகள் என்ன?