தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் விழுப்புரம்!

விழுப்புரம் : நேற்று புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

By

Published : May 20, 2020, 2:31 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதிவரை மொத்தம் 53 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறிச் சந்தை தொழிலாளர்கள் மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியது. தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை (மே 18) நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 312ஆக இருந்த நிலையில், மொத்தம் 282 பேர் தற்போதுவரை குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி கரோனா தொற்றால் புதிதாக எவரும் பாதிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் 19 பேர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்களில் 114 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர்.

இதையும் படிங்க :தமிழ்நாட்டில் 12 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details