தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

By

Published : Apr 5, 2020, 10:14 AM IST

Published : Apr 5, 2020, 10:14 AM IST

vijayabaskar
vijayabaskar

தமிழ்நாட்டில் கரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 485 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3 பேர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் உள்பட 5 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றிரவு விழுப்புரம், முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதா என்பதுகுறித்து மருத்துவக்கல்லுாரி முதல்வரிடம் கேட்டறிந்தார்.

மருத்துமவமனையை ஆய்வு செய்த விஜயபாஸ்கர்

பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு ஏற்படுத்தப்பட்ட சிறப்பு தனிப் பிரிவுகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களை ஊக்கப்படுத்தி பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details