தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அதிமுகவில் குடும்ப அரசியல்’ - முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

விழுப்புரம்: அதிமுகவில் தற்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் குடும்பங்களின் ஆதிக்கம் தலைதூக்கி வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

By

Published : Apr 5, 2019, 5:37 PM IST

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர், “தமிழ்நாட்டில் தகுதியும், திறமையும் இல்லாதவர்கள் தான் தற்போது ஆட்சி செய்து வருகின்றனர். அதிமுக அரசை குறைகூறிய பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. 50 வருடங்களாக கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை, கூழைக்கும்பிடு போடுபவர்களுக்குதான் மரியாதை உள்ளது” என்றார்.

மேலும்,அதிமுகவில் தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரின் குடும்பமும் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இங்கு உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details