தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய பயிர்கள் சேதம் குறித்து விரைவில் கணக்கெடுக்கும் பணி - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய பயிர்கள் சேதமடைந்து இருக்கும் நிலையில் அவற்றைக் கணக்கெடுக்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

By

Published : Nov 22, 2021, 11:02 PM IST

விழுப்புரம்அருகே தென்பெண்ணை ஆற்றின் கிளை நிதியில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து, தற்போது தற்காலிகமாகத் தரைப் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தரைப் பாலம் அமைக்கும் பணியினை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று (நவ.22) ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரக் காலமாகத் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருந்தது. நேற்றும், இன்றும் மட்டும் மழை இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மலட்டாற்றில் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் ஒரு பகுதி சேதமாகி பொது மக்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியிருந்தது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

இதனால் தளவானூர், திருப்பாச்சனூர், தென் குச்சி பாளையம் உள்ளிட்ட மூன்று கிராமங்கள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று முதல் தொடர்ந்து பணி செய்யப்பட்டு தற்போது இரு சக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்குப் பாலம் சரிசெய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளரிடம் அமைச்சர் பொன்முடி, "தொடர்ந்து வழக்கமான பணிகளை மக்கள் பிரதிநிதிகள் செய்து வருகிறார்கள். விவசாய பயிர்கள் சேதம் அடைந்து இருக்கும் நிலையில் அவற்றைக் கணக்கெடுக்கும் பணி மிக விரைவில் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்க அமைச்சர் மனோ தங்கராஜ் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details