தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தையின் சடலம் முன் கண்ணீருடன் தாலிகட்டிய மகன்!

விழுப்புரம்: திண்டிவனம் அருகே இறந்த தந்தையின் சடலத்தின் முன்பு மகன் தாலிகட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம்

By

Published : Aug 10, 2019, 10:01 AM IST

Updated : Aug 10, 2019, 1:59 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெய்வமணி - செல்வி தம்பதி. இவர்களது மகன் அலெக்சாண்டர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.

அதேப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஜெகதீஸ்வரி என்பவருடன் அலெக்சாண்டருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி மயிலம் முருகன் கோயிலில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி நேற்று அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார்.

அலெக்சாண்டர் திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வு

தந்தை மீது அதிக பாசம்கொண்ட அலெக்சாண்டர் தந்தை இறந்தும் அவரது கையால் மாங்கல்யம் பெற்று திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார். தந்தையின் ஆசையை நிறைவேற்ற தனது விருப்பத்தை தன் தாயிடமும், பெண் வீட்டாரிடமும் அலெக்சாண்டர் கூறியுள்ளார். அலெக்சாண்டரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பெண் வீட்டார் சிங்கனூர் வந்தனர்.

உயிரிழந்த தந்தை

பின்னர் நண்பர்கள், உறவினர்கள் முன்பு அலெக்சாண்டர் இறந்த தந்தையின் கரத்தால் மாங்கல்யம் பெற்று திருமணம் செய்துகொண்டார். இந்த நெகிழ்வான சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

Last Updated : Aug 10, 2019, 1:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details