தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் அருகே 1 லட்ச ரூபாய்க்கும் மேல் ஏலம் போன எலுமிச்சைப்பழங்கள்

விழுப்புரம் அருகேயுள்ள முருகன் கோயிலில் வேலில் குத்திய எலுமிச்சைப் பழங்கள் லட்ச ரூபாய்க்கும் மேல் ஏலம் போனது.

By

Published : Mar 20, 2022, 10:56 PM IST

லட்ச ரூபாய் ஏலத்திற்கு விலை போன எழுமிச்சம்பழம்
லட்ச ரூபாய் ஏலத்திற்கு விலை போன எழுமிச்சம்பழம்

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக்குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை பக்தர்கள் சின்ன மயிலம் என்றும், இரட்டைக் குன்றின் மீது அமைந்துள்ளதால், இரட்டைக் குன்று முருகன் ஆலயம் எனவும் அழைக்கிறார்கள்.

லட்ச ரூபாய் ஏலத்திற்கு விலை போன எலுமிச்சை

வேல் மட்டும் உள்ள கோயில்

கருவறையில் வேல் மட்டுமே உள்ள இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் உற்சவ காலங்களில் தினமும் வேலில் சொருகப்படும் எலுமிச்சைப் பழங்களை இடும்பன்பூஜையில் வைத்து ஏலம்விடும் நிகழ்ச்சி கடந்த 19.03.2022 சனிக்கிழமை நள்ளிரவு 11 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இக்கோயிலின் சிறப்பம்சமான இடும்பனுக்குப் படைக்கப்பட்ட கருவாட்டு சாதம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு (2021) முதல்நாள் பழம் ரூ.59 ஆயிரத்திற்கும்; மொத்தமாக 9 நாள் திருவிழாவில் பழங்கள் ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 900-க்கும் ஏலம் போனது. அதற்கு முந்தைய 2020ஆம் ஆண்டில் கரோனா பரவல் காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை.

ஏலம் விடப்பட்ட எலுமிச்சை

இந்நிலையில் இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் விழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், முதல் 9 நாட்களுக்கு நடைபெறும் திருவிழாவின் போது, இரட்டைக் குன்றின் மீது அமைந்துள்ள முருகன் அருகில் வைக்கப்பட்டுள்ள வேல் மீது, ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் வீதம் 9 நாட்களும் வைத்து பூஜை செய்யப்பட்டன.

இந்த பழங்கள் 11ஆம் நாள் விழா இரவில் ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி நேற்றிரவு (19/03/2022 சனிக்கிழமை) எலுமிச்சைப் பழங்கள் ஏலம் விடப்பட்டன. முன்னதாக, இடும்பன் சாமிக்கு கருவாடு சாதம் படையல் வைத்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பின்னர், எலுமிச்சை பழங்கள் ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டது. இதை உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆர்வமுடன் ஏலம் எடுத்தனர். குறிப்பாக, குழந்தையில்லாத தம்பதியினர், வியாபாரம் செய்பவர்கள், வீடுகட்ட முயற்சிப்பவர்கள், தொழில் செய்ய முயற்சிபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் எனப் பலர் தங்கள் குறைகள் தீரும் என்ற நம்பிக்கையில் கலந்துகொண்டு ஏலம் எடுக்க முனைப்பு காட்டினர்.

ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ஏலம்

ஏலம் எடுப்பவர்களுக்கு எலுமிச்சைப் பழத்துடன் ஒரு உருண்டை கருவாடு சாதம் வழங்கப்பட்டது. இதில் 7ஆம் நாள் எலுமிச்சை பழத்தை சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி 15,200 ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். மற்ற நாட்களில் வைத்த பழங்கள் 53,900 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் ஏலம் போனது.

மேலும், கடந்த ஆண்டு ஏலத்தில் எலுமிச்சைப் பழம் ஏலம் எடுத்து, பெண் குழந்தை பெற்ற விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், வேண்டுதலை நிறைவேற்ற குழந்தையின் எடைக்கு எடை சில்லறை நாணயங்களை காணிக்கை செலுத்தினர். தற்போது 2022ஆம் ஆண்டு நாட்டாமை பாலகிருஷ்ணன் இறந்ததால் மற்றொரு கோயில் நிர்வாக நபர் மூலம் எலுமிச்சைப் பழங்களின் ஏலம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க:First On: 'ஐ' பட வில்லன் நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் கைது

ABOUT THE AUTHOR

...view details