விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கருவேப்பிலை பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் மற்றொரு பகுதி விழுப்புரம் மாவட்டத்துடனும் இணைந்திருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அரசு சலுகைகளை பெறமுடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கருவேப்பிலைப் பாளையம் கிராமத்தை ஒரே ஊராட்சியாக மாற்றி விழுப்புரத்துடன் இணைக்க வேண்டும் என கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு கொடுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி தமிழ்நாடு அரசு கருவேப்பிலை பாளையம் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைத்ததுடன் புதிய ஊராட்சியாக அறிவித்தும் அரசாணை வெளியிட்டது.
மக்கள் கேக் வெட்டி கொண்டாட்டம் இதனையடுத்து, கருவேப்பிலை பாளையம் புதிய ஊராட்சியாக உருவாக காரணமாக இருந்த அமைச்சர் சி.வி சண்முகம், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, குமரகுரு எம்எல்ஏ, அரசுத்துறை அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்து கிராம மக்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதையும் படிங்க: ’உணவு பொருட்களை வாங்குவதில் நுகர்வோருக்கு கவனம் தேவை’