தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு ஊரடங்கு: வெறிச்சோடிய விழுப்புரம்

விழுப்புரம்: மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள முக்கியச் சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

கரோனா ஊரடங்கு: வெறிச்சோடிய விழுப்புரம்
கரோனா ஊரடங்கு: வெறிச்சோடிய விழுப்புரம்

By

Published : Jul 26, 2020, 2:20 PM IST

கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நான்காவது ஞாயிறான இன்றும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

இதையடுத்து விழுப்புரம் நகரில் உள்ள புதுச்சேரி சாலை, திருச்சி சாலை, சென்னை சாலை, நேருஜி வீதி, திரு.வி.க. வீதி உள்ளிட்ட முக்கியச் சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றியும், கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

இதற்கிடையே விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details