தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் வருகிற 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா : வழிபாடு நடத்த அனுமதி கேட்டு மனு!
விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் விநாயகரை வழிபட அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
Hindu People's Party seeking permission to worship Ganesha in the district in honor of Ganesha Chaturthi.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட இந்து மக்கள் கட்சியினர், இந்துக்களின் மனம் புண்படாமலிருக்க விநாயகரை வழிபடவும் பூஜைகள் செய்யவும் அனுமதி அளிக்கக்கோரி, விநாயகர் சிலையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இன்று (ஆக.10) மனு அளித்தனர்.