தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச இணையதள வகுப்புகள் தொடக்கம்!

விழுப்புரம்: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தேர்வுகளுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச இணையதள வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

free online classes in villupuram district
free online classes in villupuram district

By

Published : May 22, 2020, 11:02 PM IST

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, "விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் 'தன்னார்வப் பயிலும் வட்டம்' வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கினால் பயிற்சி வகுப்புகள் நடத்த இயலவில்லை. தேர்வர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வுக்குத் தயாராகி வரும் நிலையில், கிராமப்பகுதி மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் இணையதளத்தில் உரிய செயலி வழியாகப் பயிற்சி அளிக்க, உரிய வழிமுறைகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொலி வழிக்கற்றல், மின்னணு பாடக்குறிப்புகள், மின் புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான பயிற்சிகள், மாதிரி தேர்வு வினாத்தாள்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயர், முகவரி, ஆதார் எண் வேலைவாய்ப்பு பதிவு எண்ணைக் கொடுத்து, உள்ளே நுழைந்து போட்டித்தேர்வு என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தேர்வுக்கு தயாராகிறோம் என்பதைத் தேர்வு செய்து, அதில் வரும் பாடக்குறிப்புகளை தமிழ், ஆங்கிலத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். மாதிரித்தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - 2 தேர்வுக்கான இலவச இணையதள வகுப்புகள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மே 18ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 04146- 226417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உணவிற்கு வழியில்லை... குடிபெயர்ந்த தொழிலாளர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details