விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கம் மயிலம் - புதுவை சாலையில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனி சுமார் 12 ஆண்டுகளாக செயல்பட்டுவருகின்றது. இதனை, கடலூரை சேர்ந்த வெங்கடேஷ், மாதவன் ஆகிய இருவரும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 23) காலை பணியில் இருந்த கடலூர், பாலூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பெயிண்ட் வேலையில் ஈடுப்பட்டு வந்தார்.
அப்போது, கெமிக்கல் பேரலில் இருந்து திடீரென்று தீ பிடித்து மளமளவென்று எரிந்தது. கம்பெனி ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள். இதனை கண்ட அக்கம் பக்கதினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையறிந்த காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ் விபத்தில் காயமடைந்தார்.