இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள நேரு யுவ கேந்திரா அலுவலகம் அருகில், இந்திய செஞ்சிலுவை சங்க கூட்டரங்கில் இன்று காலை 9:30 மணியளவில் தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இரு பாலரும் போட்டிகளில் பங்கேற்கலாம்.
இதில் நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாட்டு, ஓரங்க நாடகம் (ஆங்கிலம், இந்தி), கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம், பேச்சுப்போட்டி, ஹார்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சிதார், கிடார், தபேலா, மணிப்புரி நடனம், பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக், ஒடிஸி ஆகியவற்றிற்கு தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதற்கான விதிமுறைகள் :
- அனைத்துப் போட்டிகளும் காலை 9.30 மணிக்கு தொடங்கப்படும்.
- தாமதமாக வருபவர்களைப் பங்கேற்க அனுமதிக்க இயலாது.
- பிறப்புச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஒரு நபர் ஒரு பிரிவில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்.
- மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான தேர்வு போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
- மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி திருச்சியில் நடைபெறும்.
- 23ஆவது தேசிய இளைஞர் விழா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அடுத்தாண்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு,