இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக பதிவுப்பெற்ற கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.1000 வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பதிவுப்பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர் நலவாரியம், அனைத்து உடல் உழைப்பு நலவாரியம் உள்ளிட்ட வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக நிவாரண தொகை வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்தவர்கள் வங்கி கணக்கை சரிபார்த்து கொள்ள வேண்டும். இதுநாள் வரை தங்களது வங்கி கணக்கு விவரங்களை நலவாரிய அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளாத தொழிலாளர்கள் உடனடியாக கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கட்செவி அஞ்சல் எண்ணுக்கு வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும். ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களின் விவரங்களை கீழ்காணும் விவரங்கள் அடங்கிய பட்டியலாக தயார் செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.