விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 478ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரத்தில் வேகமெடுக்கும் கரோனா!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 17) ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 478ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரை, ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக சில இடங்களில் மட்டும் நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக குறைந்திருந்த கரோனா தாக்கம், கடந்த 12ஆம் தேதி முதல் தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணில் பதிவாகி வருகிறது.
இதனால், மீண்டும் கரோனா குறித்த பீதி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில் நேற்று (ஜூன் 17) ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 478ஆக உயர்ந்துள்ளது.