தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிக்கன் பிரியர்களுக்கு சில்லி சிக்கன் 'இலவசம்' - கரோனா விழிப்புணர்வு

விழுப்புரம்: கரோனா வைரஸ் அச்சத்தால் சில்லி சிக்கன் இலவசமாக வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

சில்லி சிக்கன் 'இலவசம்'
சில்லி சிக்கன் 'இலவசம்'

By

Published : Mar 21, 2020, 1:50 PM IST

சிக்கன் சாப்பிட்டால் கரோனா வைரஸ் பரவும் என்ற வதந்தியால், மக்கள் பலரும் சிக்கன் சாப்பிடுவதில் அச்சம் காட்டிவருகின்றனர். இதனால், சிக்கன், முட்டை விற்பனை விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பலர் தாங்கள் வளர்த்த கோழிகளை உயிருடன் புதைக்கும் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன.

அறிவியலின்படி சிக்கன், முட்டை சாப்பிட்டால் கரோனா வைரஸ் பரவாது என்று கூறினாலும், மக்கள் மனத்தில் பயம் இருந்துதான்வருகிறது. இதைப் சரிசெய்யும்விதமாக பல மாவட்டங்களில் இலவசமாகச் சிக்கன்களும், சலுகை விலையில் கோழிக்கறிகளும் வழங்கிவருகின்றனர்.

சிக்கன் பிரியர்களுக்குச் சில்லி சிக்கன் 'இலவசம்'

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் காந்தி சிலை அருகேயுள்ள கடையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், சில்லி சிக்கன் இலவசமாக வழங்கிவந்தனர். இந்தத் தகவலை அறிந்து அப்பகுதியில் குவிந்த சிக்கன் பிரியர்கள் சில்லி சிக்கனை பிளேட் பிளேட்டாக சாப்பிட்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவிட்-19: 12 நாள்களில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details