தமிழ்நாடு

tamil nadu

திண்டிவனம் தொழில் பூங்கா! தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு

By

Published : Sep 12, 2019, 7:32 AM IST

விழுப்புரம்: திண்டிவனம் அருகே அமையவுள்ள தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் நேற்று அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

chief secretariat

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெலாகுப்பத்தில் 700 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ. 500 கோடி செலவில் 'தொழில் பூங்கா' அமைக்கப்படும் என 2018-19ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பெலாக்குப்பம், கொள்ளார், வெண்மணியாத்தூர் ஆகிய கிராமங்களில் அமைய உள்ள தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் கே.சண்முகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிரியா, கள்ளக்குறிச்சி தனி அலுவலர் கிரன் குராலா, திண்டிவனம் கோட்டாட்சியர் மெர்சி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். ஆய்வுக்கு பின் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படவேண்டிய இழப்பீட்டு தொகை குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்து அனுப்பிவைக்குமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை, அரசு முதன்மைச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details