தமிழ்நாடு

tamil nadu

தொண்டை புண் பிரச்னைக்கு 5 மீட்டர் இடைவெளியில் சிகிச்சை பார்த்த மருத்துவர்!

விழுப்புரம்: கண்டமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர் ஒருவர், தொண்டை புண் சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு 5 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து டார்ச்லைட் மூலம் பரிசோதனை செய்யும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

By

Published : Jun 10, 2020, 10:30 PM IST

Published : Jun 10, 2020, 10:30 PM IST

மருத்துவரின் வைரஸ் வீடியோ
மருத்துவரின் வைரஸ் வீடியோ

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், நேற்று மாலை தொண்டை புண் சிகிச்சைக்கு வந்த சிறுவனைப் பரிசோதித்திருக்கிறார்.

மருத்துவரின் வைரல் வீடியோ

அப்போது கரோனா நடவடிக்கை என 5 மீட்டர் இடைவெளி விட்டு டார்ச்லைட் மூலம் பரிசோதனை செய்துள்ளார். அதனை அருகிலிருந்த இளைஞர் ஒருவர் செல்போனில் படம்பிடித்துள்ளார். அந்தக் கணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க:அதிகமான கரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் செல்லூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details