தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் 1,150 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க 1,150 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.

தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்

By

Published : Sep 12, 2021, 12:12 PM IST

விழுப்புரம்: கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்.12) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 1,150 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் வலியுறுத்தினார்.

மேலும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தடுப்பூசி சிறப்பு முகாமினை சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் ஆர்.லட்சுமணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் புஷ்பராஜ், நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: '100% தடுப்பூசி செலுத்திய கிராமங்கள் ஆயிரத்தை தாண்டும்’ - மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details