வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தனியார் மண்டபத்தில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சார்பில் திருப்பத்தூரை தனி மாவட்டமாக உருவாக்கி தந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு அமைச்சர் கே.சி.வீரமணிக்கு பாராட்டு விழா!
வேலூர்: திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, "இதுபோன்ற பாராட்டு விழாக்கள் தான் மக்களுக்கு சேவை செய்வதற்கு மேலும் உற்சாகப் படுத்துவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரூர் முதல் வாணியம்பாடி வரை உள்ள இருவழிச் சாலையை விரிவுப்படுத்தி, நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு ரூ.246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்" தெரிவித்தார்.
மேலும் பொது சுகாதார கூட்டமைப்பு அலுவலர்கள் சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.