தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் 'திடீர்' ரத்து!

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதால் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

By

Published : Apr 16, 2019, 7:52 PM IST

Updated : Apr 16, 2019, 8:07 PM IST

ec

அதிகளவிலான பணம் பறிமுதல் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில் அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்திருந்தது. வேலூரில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில் அவருக்கு நெருக்கமானவர்களின் சிமெண்ட் ஆலை மற்றும் அவரது வீட்டில் சுமார் 11 கோடியே 63 லட்ச ரூபாய் பணம் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வேலூரில் தேர்தல் நடத்தத் தடை விதிக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது. நாளை மறுநாள் தமிழ்நாட்டில் உள்ள 38 தொகுதிகளுடன் சேர்த்து வேலூர் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவிருந்த நிலையில் இன்று மாலை தேர்தல் ரத்து அறிவிப்பு வந்துள்ளது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Apr 16, 2019, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details