தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாரத்தில் மூன்று நாள்கள் உரக்கடைகள் திறக்கப்படும்!

வேலூர்: மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய நாள்களில் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை உரக்கடைகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 11, 2020, 12:29 PM IST

vellore-collector-order
vellore-collector-order

ஊரடங்கால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் பாதிப்படையாத வகையில் 44 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள கிடங்குகள், குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் உரங்களை வாங்கி பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, தனியார் உரக்கடைகள் ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய நாள்களில் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகை, பால் போன்ற பொருள்களுக்கு தடை ஏற்படாது என்றும் அம்மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரியாணிக்காக அடம்பிடித்த கரோனா நோயாளி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details