தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயளிகளுக்கு சிகிச்சை சரியாக அளிக்கபடுகிறதா என்பதை உறுதி செய்ய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Vaniyambadi Government Hospital Inspection
Vaniyambadi Government Hospital Inspection

By

Published : Dec 27, 2019, 9:05 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் அவ்வப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை சரியாக வழங்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் விதம் குறித்தும், மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின், தலைமை மருத்துவரிடம் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கவும், மருத்துவமனையில் இடைத்தரகர்கள் யாரும் உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுரைகளை வழங்கினார்.

மருத்துவமனையை ஆய்வு செய்யும் ஆட்சியர்

இடைத்தரகர்கள் யாரேனும் மருத்துவமனையில் நுழைந்து செயல்பட்டால் அவர்களை உடனடியாக காவல் துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் மருத்துவமனைக்கு ஏதேனும் வசதிகள் தேவைப்பட்டால் உடனடியாக அணுகுங்கள் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:

நீங்களும் நாளை விஞ்ஞானியாகலாம் - மாணவர்களுக்கு ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details