தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக பிரமுகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

வேலூர்: திருப்பத்தூர் அருகே அதிமுக பிரமுகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பிரமுகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

By

Published : Apr 24, 2019, 9:55 AM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். அதிமுக பிரமுகரான இவருக்கு கலா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இவர் தேர்தலுக்காக சுவற்றில் வரையப்பட்டிருந்த திமுக சின்னத்தின் மீது ஆயில் ஊற்றியதாக, திமுக கட்சியைச் சேர்ந்த வேலுயம்மாள், முருகன், மாதையன், எத்திராஜ் மற்றும் கண்ணகி ஆகியோர் கந்தலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காமராஜ் நகருக்கு அவரைத் தேடிச் சென்றுள்ளனர். ஜெகன்நாதன் வீட்டில் இல்லாததால் காவல் துறையினர், அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றுவிட்டனர்.

இதை அறிந்து மனமுடைந்த ஜெகன்நாதன் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில் தண்டவாளத்திலிருந்து அவரது உடலை கைப்பற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவரது உறவினர்கள் தற்கொலைக்கு காரணமான திமுகவினரை உடனடியாக கைது செய்யக்கோரி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூர் காவல்துறையினர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் தர்ணாவில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details