வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சென்னாம்பேட்டை தக்கடி தெருவைச் சேர்ந்தவர், ஃபாரூக். பெரும் தொழிலதிபரான இவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார்.
திருடிய வீட்டில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்! - திருடன் சமைத்து சாப்பிட்ட வீடு
வேலூர்: வாணியம்பாடி அருகே வீட்டை உடைத்து உள்ளிருந்த பொருட்களை திருடியது மட்டுமல்லாமல் அங்கேயே திருடர்கள் சமைத்து சாப்பிட்ட விவகாரம் நடந்துள்ளது.

திருடிய வீட்டில் மக்ரூனி சாபிட்ட திருடர்கள்
திருட்டு நடந்த வீடு.
இதனை அறிந்த திருடர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த பல லட்ச மதிப்பிலான தங்க நகைகள், வீட்டில் இருந்த டிவி, வெளியே இருந்த இருசக்கர வாகனம் என அனைத்தையும் திருடினர். மேலும், திருடிய சோர்வில் அவர்கள் சமையல் அறைக்குச் சென்று மக்ரூனி சமைத்து சாப்பிட்டு சென்றுள்ளனர்.