தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவலரிடம் அவதூறு தொடர்பான முருகன் வழக்கு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த முருகன், பெண் காவலரிடம் அவதூறாக நடந்துகொண்ட வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

murugan misbehaving case  Rajiv Gandhi assassination case  Rajiv Gandhi assassination case accused murugan  misbehaving case  murugan misbehaving case adjourned  vellore  vellore news  vellore latest news  முருகன்  முருகன் வழக்கு  முருகன் வழக்கு ஒத்திவைப்பு  எஸ்காட்  ராஜீவ் காந்தி கொலை  பெண் காவலரிடம் அவதுராக நடந்துகொண்ட வழக்கு
முருகன் வழக்கு ஒத்திவைப்பு

By

Published : Nov 30, 2022, 9:16 AM IST

வேலூர்:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன் உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த 12.11.2022 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் முருகன் வேலூர் மத்திய சிறையில் இருந்த போது கடந்த 2020 ஆம் ஆண்டு சிறையில் பெண் காவலரிடம் அவதுறாக நடந்துகொண்டதாக மத்திய சிறை துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4- ல் நடைபெற்று வருகிறது. முருகன் இலங்கையை சேர்ந்தவர் என்பதாலும், அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதாலும் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு நேற்று (நவ 29) விசாரணைக்கு வந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக முருகன் ஆஜர்படுத்தப்படவில்லை. இதனால் வழக்கு விசாரணையை 13.12.2022 ம் தேதிக்கு ஒத்திவைத்து வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4- நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: போக்குவரத்து காவலராக இடமாற்றம் செய்யும் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ABOUT THE AUTHOR

...view details