வேலூர்: தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மீனாட்சி - ராமு தம்பதி. இவர்கள் இன்று (டிச.26) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், தனது மகன் செந்தில்குமார், மருமகள் தேவி ஆகியோர் தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும், எங்களது வீட்டு பட்டாக்களை எடுத்துக்கொண்டு தர மறுப்பதாகவும், நாங்கள் இப்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்திருந்தனர்.
தங்களைத் தாக்கிய மகன் மீது ஆட்சியரிடம் புகார் - நடவடிக்கை எடுக்க உத்தரவு
தங்களைத் தாக்குவதாக மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடத்தில் மனு அளித்த நிலையில் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Etv Bharat
மேலும், தனது மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரிஜினல் பட்டவை மீட்டுத் தரக் கோரியும் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், இது குறித்து உடனடியாக விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பேருந்து நிற்கவில்லை: மதுராந்தகம் அருகே சாலை மறியல்!