தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக நகராட்சி துணைத்தலைவரின் எதிர்ப்பு - தூக்கிப்போட்டு தூர்வாரிய கவுன்சிலர்

வார்டு பணிக்காக நகராட்சி ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்த நகராட்சி துணைத் தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பதாகப் புகார் கூறும் பெண் உறுப்பினர், தாமே களத்தில் இறங்கி, அந்த இயந்திரத்தை அழைத்து வந்து தூர்வாரும் பணிகளை மேற்கொண்டார்.

தூர்வாரிய பெண் வார்டு உறுப்பினர்
தூர்வாரிய பெண் வார்டு உறுப்பினர்

By

Published : Nov 23, 2022, 3:32 PM IST

வேலூர்:பேர்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட 6ஆவது வார்டு உறுப்பினராக (கவுன்சிலர்) இருப்பவர், தன்வீரா பேகம், முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். இவரது வார்டுக்குள் செல்லும் கொண்டாற்றில் குப்பைக்கழிவுகள் அதிகம் இருப்பதால், மழைக்காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்துவிடுகிறது.

இதற்கு முன்கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்ததன் காரணமாக, வீடு இடிந்து விழுந்து சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக்கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6-வது வார்டுக்குள் பாயும் கொண்டாற்றை தூர்வாரக்கோரி வார்டு உறுப்பினர் தன்வீரா பேகம் பேர்ணாம்பட்டு நகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இன்று தாமாக சென்று நகராட்சி ஜேசிபி இயந்திரத்தை அழைத்து வந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டார். அப்போது திமுகவைச் சேர்ந்த பேர்ணாம்பட்டு நகராட்சியின் துணைத்தலைவர் ஆலியார் ஜிபேர் அகமது என்பவர், ’ஜேசிபி இயந்திர ஓட்டுநருக்கு போன் செய்து பணி செய்யக்கூடாது என்றும்; இயந்திரம் ஏதேனும் பழுதானால் உனது சம்பளத்தில் பிடித்துவிடுவேன்’ எனவும் கூறி தடுத்துள்ளார்.

தூர்வாரிய வார்டு உறுப்பினர்

’மாற்றுக்கட்சியினரின் வார்டு என்பதால் எங்கள் வார்டில் எந்தப் பணியும் செய்வது இல்லை’ என 6ஆவது வார்டு உறுப்பினர் தன்வீரா பேகம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில், ஜேசிபியில் அவரே அமர்ந்து தூர்வாரும் பணியையும் மேற்பார்வை செய்கிறார்.

இதையும் படிங்க:VIDEO;வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் - விரட்டி பிடித்த மக்கள்

ABOUT THE AUTHOR

...view details