வேலூர்(Robbery News): மாவட்டத்தின் முக்கியப் பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோயில் அருகில் அமைந்துள்ளது பிரபல நகைக் கடை ஜோஸ்-ஆலுக்காஸ். 5 தளங்களுடன் இந்த நகைக் கடை இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று(டிச 14) இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்ற ஊழியர்கள் இன்று (டிச 15) காலை வழக்கம் போல் கடையைத் திறந்து பார்த்த போது தரைதளத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ள அலமாரிகளும், லாக்கரும் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி எ.ஜி.பாபு, எஸ்பி ராஜேஷ் கண்ணன், ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட காவல் துறையினர் மோப்ப நாய் சிம்பா மற்றும் கைரேகை நிபுணர் குழுவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போயிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் கடையில் உள்ள நகைகளை எடைபோடும் பணியையும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நகைக் கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களையும், வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை போன நகைக் கடைக்கு அருகில் தடயங்கள், கைரேகைகள் சேகரிப்பட்டு வருகிறது.
Robbery: பிரபல நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!
Robbery: வேலூரில் பிரபல நகைக் கடையில் நுழைந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
பிரபல நகைக் கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!
இந்நிலையில் கொள்ளை நடந்த கடையின் சுவர் ஓரம் 'ஒரு தலை விக்' ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Last Updated : Dec 15, 2021, 6:11 PM IST