தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய மாவட்டங்களின் தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர்!

வேலூர்: ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அலுவல் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி நேரில் சென்று பார்வையிட்டார்

Examine ceremony preparations ranipettai and thirupathur district open function

By

Published : Nov 22, 2019, 9:01 AM IST

வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, இரண்டு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

புதிய மாவட்டங்களின் அலுவல் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா வருகின்ற 28ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்படி ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

கே.சி. வீரமணி ஆய்வு

அப்போது, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆட்சியர் திவ்யதர்ஷினி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆட்சியர் சிவனருள், காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: இன்று உதயமாகிறது ’தென்காசி’ புதிய மாவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details