தமிழ்நாடு

tamil nadu

மருத்துவ சீட்டுக்காக ரூ.4.75 லட்சம் இழந்த இளம்பெண்: குற்றவாளி கைது!

By

Published : Dec 24, 2020, 11:03 PM IST

வேலூர்: பிலிப்பைன்ஸில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மருத்துவ சீட்டுக்காக ரூ.4.75 லட்சத்தில் இழந்த இளம்பெண்
மருத்துவ சீட்டுக்காக ரூ.4.75 லட்சத்தில் இழந்த இளம்பெண்

வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெபி சிப்ரோள் (25). இவர் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் வேலூர் பாகாயம் பகுதியைச் சேர்ந்த சௌந்தராஜன் என்பவர் ஸ்டெபியின் தந்தை இன்பராஜ் மூலம் இவருக்கு அறிமுகமாகியுள்ளார்.

இவர், மனித உரிமை ஆணையத்தில் இருப்பதாகவும், பத்திரிகையில் இருப்பதாகவும் கூறி பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான இடம் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இவரை நம்பிய அப்பெண்ணின் தந்தை இன்பராஜ் ஆறு தவனையாக 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 7ஆம் தேதி ஸ்டெபி பிலிப்பைன்ஸில் சௌந்தராஜன் கூறிய மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்றுள்ளார்.

ஆனால், அங்கு தற்போது அட்மிஷன் நடைபெறவில்லை என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கூறிய நிலையில் ஸ்டெபி தாயகம் திரும்பினார். இதனைத் தொடர்ந்து தான் கொடுத்த பணத்தை இன்பராஜ் சௌந்தராஜனிடம் திரும்ப கேட்டுள்ளார்.

ஆனால், பணத்தை அவர் திரும்ப கொடுக்கவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாரிடம் சௌந்தராஜன் மீது ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதனடிப்படையில், வழக்குப்பதிந்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வாளர்கள் இலக்குவன், கவிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் சௌந்தராஜனிடம் மேற்கொண்ட விசாரணையில், பணமோசடி நடைபெற்றதற்கான முகாந்திரம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று (டிச. 24) சௌந்தராஜனை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதையும் படிங்க: லைக் செய்யுங்க...சப்ஸ்கிரைப் செய்யுங்க...! கோடிக்கணக்கில் நூதன மோசடி!

ABOUT THE AUTHOR

...view details